நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் முக்கிய சாலையின் பாலத்திற்கு மேல் செல்லும் தண்ணீர்.

Updated On :8 ஆகஸ்ட் 2022, 6:10 am

DIN

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உதகை குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல மேல் பவானியில் 189 மி.மீ, தேவாலாவில் 188 மி.மீ , கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தலா 185 மி.மீ. கிளன்மார்கன் மற்றும் நடுவட்டம் பகுதியில் தலா 60 மி.மீ, உதகையில் 35மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தான் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.