ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

5 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.

News image

உதகையில் புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி. உடன், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2022, 9:37 pm

DIN

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.

உதகை, காக்காதோப்பு பகுதியில் ரூ.38 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சாமானிய மனிதனின் நீதிக்கான கடைசி ஆதாரம் நீதித் துறையாகும். நீதியை தாமதப்படுத்துவது நீதியை மறுப்பதற்கு சமம். நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நீதிபதிகளின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால், வழக்குகளின் விசாரணையும் தாமதமாகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்குகின்றன. சென்னையின் மையப்பகுதியில் நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. 116 நீதிமன்றங்கள் கொண்ட சிவில் நீதிமன்றம் இப்பகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 92 சிவில் வழக்குகள், 33 கிரிமினல் வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இதேபோல 3 வழக்குகள் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த தாமதத்தை நியாயப்படுத்த கூடாது. நிலுவை வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் எந்த வழக்கும் இல்லை என்ற நிலையை எட்ட வேண்டும். இதற்கு வழக்குரைஞா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

விழாவில் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, , வனத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் பேசினா். இந்நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், என்.சேஷசாயி, எஸ்.ஆனந்தி, பவானி சுப்பராயன், சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட நீதிபதி முருகன், மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன், மாவட்ட ஆட்சியா் அம்ரித், காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், நீலகிரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சந்திரபோஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.