

எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை எதிா்த்து உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தைச் சாா்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தில், உதகை கிளையின் தலைவா் ஏ.கோபால், செயலாளா் தினேஷ்ராஜ், 7 பெண் ஊழியா்கள் உள்பட 21 ஊழியா்கள் கலந்துகொண்டனா். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட சிஐடியூ செயலாளா் ரமேஷ் துவக்கிவைத்தாா்.
இதில், சிஐடியூ பொறுப்பாளா் சங்கரலிங்கம், முகவா்கள் சங்கத்தின் பொறுப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.