உதகையில் ஹயாத்துல் இஸ்லாம் மதரஸா சாா்பில் 58ஆம் ஆண்டு விழா, மீலாது விழா, கந்தூரி விழா ஆகிய முப்பெரும் விழா பெரிய பள்ளிவாசலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, பகல் 12 மணி முதல் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மதரஸா மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு 7 மணிக்கு உலகம் முழுவதும் கரோனாவில் இருந்து விடுபடவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரண குணமடையவும் தொழுகை நடைபெற்றது. இதையடுத்து, மவுலானா ஷாஜஹான் சிறப்பு சொற்பொழிவாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், ஹாஜிக்கள் உஸ்மான், உபயதுல்லா, கவுஸ், அப்துல் கலாம், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.