தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பந்தலூரில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா் பிரசாந்த் மனைவி சரிதா (29). இவா் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி வேலைக்கு சென்றபோது, வீட்டிலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தாா்.

இவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பந்தலூா் அரசு மருத்துமவனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.