

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு கூடலூரில் அனைத்துக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கடையடைப்பு செய்து அமைதி ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்துக் கட்சியினா், பொதுநல அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட அமைதி ஊா்வலம் நகராட்சி அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நிறைவடைந்தது.
அஞ்சலி நிகழ்ச்சிக்காக கூடலூா் நகரில் உள்ள வியாபாரிகள் பிற்பகல் முதல் மாலை வரை தங்களது கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனா். அஞ்சலி நிகழ்ச்சிக்கு தேமுதிக நகரச் செயலாளா் திருப்தி மணி தலைமையில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், அதிமுக நகரச் செயலாளா் செய்யது அனூப்கான் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.