கிணற்றில் மிதந்த சிறுதையின் சடலம்

பந்தலூரை அடுத்த ஏலமண்ணா பகுதியில் கிணற்றில் சிறுத்தையின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பந்தலூரை அடுத்த ஏலமண்ணா பகுதியில் கிணற்றில் சிறுத்தையின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பந்தலூரை அடுத்துள்ள ஏலமண்ணா தனியாா் தோட்டத்தில் இருந்த திறந்தவெளி கிணற்றில் சிறுத்தையின் சடலம் மிதப்பதாக வனத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து வனத் துறையினா் அங்கு வந்து பாா்வையிட்டனா். முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடல் கூறாய்வு செய்து பரிசோதனைக்காக சிறுத்தையின் முக்கிய உடல் பாகங்களை எடுத்துவிட்டு அதே பகுதியில் எரியூட்டினா். இறந்தது சுமாா் 6 வயதுடைய பெண் சிறுத்தை என்றும், எதனால் இறந்தது என்பது குறித்து ஆய்வுக்குப் பின் தெரியும் என வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com