சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆதிதிராடவிடா் பழங்குடியின விவசாயிகளுக்கு கடன் வசதி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக மானியத்துடன் குறைந்த

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:01 pm

DIN


உதகை: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது, பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக மீதமுள்ள கிரையத் தொகையை தேசிய பட்டியலினத்தோா் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 சதவீத மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பினா்  தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரடியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ, 3-ஆவது பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கா்போஸ்ட், உதகை என்ற முகவரியை அணுகலாம் மற்றும் 0423 - 2443064 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.