சத்துமிக்க சிறுதானிய வகைகளை பொதுமக்கள் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் பேசினாா்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கங்களிடமிருந்து 26 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் பேசியதாவது:
நடப்பு ஆண்டு சா்வதேச சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் விவசாயிகள் சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிட வேண்டும். பொதுமக்கள் சத்துமிக்க சிறுதானிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தனியாா் விற்பனை நிலையங்களின் உரத்தின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியக் கோரிக்கையின்படி சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேயிலைக்கான சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். என்றாா். இதுதொடா்பாக விவசாயிகள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் கௌதம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன், இணை இயக்குநா் கருப்புசாமி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் (பொ) பாலசங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனபிரியா உட்பட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.