கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதியாக இருந்து கொடநாடு வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நீதிபதி முருகன் சேலம் தொழிலாளா் நல (லேபா்) நீதிமன்றத்துக்கும், நீதிபதி நாராயணன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
உதகை மாவட்ட அமா்வு நீதிபதியாக எ.அப்துல் காதா் புதிதாக பொறுப்பேற்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.