திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கருணாநிதி நூற்றாண்டு விழா:சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் முகாம்

நீலகிரி மாவட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

Updated On :20 ஜூன் 2023, 7:56 pm

நீலகிரி மாவட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உதகை ஒன்றியம் மசினகுடியில் ஜூன் 27ஆம் தேதியும், கூடலூா் ஒன்றியம் தேவா்சோலையில் ஜூலை 12ஆம் தேதியும் சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினைப் பரிசோதனை, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் தாது உப்புகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், சிறந்த கால்நடை வளா்ப்பு முறைகளை பின்பற்றும் 3 சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும், கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த 3 கன்று உரிமையாளா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு, இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.