தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு தில்லியின் தயாள்பூர் பகுதியில் ரூ. 400 தொடர்பான தகராறில் 26 வயது இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நியூ முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்த கைஃப் (26) என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், வெள்ளிக்கிழமை மாலை அவருக்குத் தெரிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
உடனடியாக அவர் ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் பிடிபட்டனர். விசாரணையின் போது, கைஃப் தங்களிடம் ரூ.400 கடன் வாங்கியதாகவும், அதுதொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் அந்தச் சிறுவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அன்று வாக்குவாதம் முற்றியதில், அது கொலையில் முடிந்தது என்றார். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்குதலைப் படம்பிடித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததைக் கண்டறிந்த போலீஸார், இந்த வழக்கில் சமூகஊடகங்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் தாக்கத்தால் இந்தச் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாகத் தோன்றுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதுதொடர்பான மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
Three juveniles were apprehended for allegedly stabbing a 26-year-old man to death in northeast Delhi's Dayalpur area following a dispute over Rs 400, an official said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!

அமைதி வழிப் போராட்டங்கள் அச்சுறுத்தலின்றி அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா.

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



