/

தில்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

தில்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

ஐபிஎல் கோப்பை - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 11:21 am

தில்லியில் ஐபிஎல் ஆட்டத்தை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போட்டி நடக்கும் அதே வேளையில், அதை வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது. இதனிடையே, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள், தில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை நேரலையில் பார்த்தவாறு செல்போன்கள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டுள்ளனர்.

சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட குற்றவாளிகள் ஹிமன்ஷு (30), அமன் ஜெயின்(34), ஆகாஷ் கார்க் (31) மற்றும் ஆஷிஷ் குமார் (35) எனக் கண்டறியப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அடிக்கடி இதுமாதிரியான சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Summary

The police arrested four people on Friday in Delhi for engaging in illegal betting on an IPL match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.