

உதகை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை இரவு சிறுத்தை உலவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
நீலகிரி மாவட்டம் எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒட்டிய வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவது சமீபகாலமாக தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை இரவு உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் காவல் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.