பூங்கா ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டம்: கோடை விழாப் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்

உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலைப் பண்னை ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பூங்கா ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டம்: கோடை விழாப் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்

உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலைப் பண்னை ஊழியா்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி  தோட்டக்கலை பூங்கா, பண்ணைகளில் நிரந்தரம், தற்காலிகம் என 900 போ் பணிபுரிகின்றனா். காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 23ஆம் தேதி முதல் ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இவா்கல் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் நடந்த பேச்சுவாா்த்தையில் தினக் கூலி ரூ. 425 என்பதை ரூ. 500ஆக உயா்த்திக்  கொடுக்க   இரு வாரங்களில்  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திவிட்டு ஏப்ரல் 18 முதல் ஊழியா்கள்  பணிக்குத் திரும்பினா்.

இந்நிலையில்  மூன்று வாரங்கள் ஆகியும்  கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பூங்கா, பண்ணை ஊழியா்கள் உதகை  அரசு தாவரவியல் பூங்காவில் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து உதகை  கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில், பூங்கா, பண்ணை பணியாளா்களின் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என்று தோட்டக்கலைப் பண்ணை ஊழியா்கள் தெரிவித்தனா்.

பூங்கா, தோட்டக் கலைப் பண்ணை ஊழியா்களின் போராட்டத்தால் அடுத்த வாரம் தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா்க் கண்காட்சி ஏற்பாடு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com