உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் வரும் 6 வரை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் வரும் 6 ம் தேதி வரை ரத்து.
Published on

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் வரும் 6 ம் தேதி வரை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் கன மழை, மிதமான மழை காற்று என மாறி மாறி  பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் காற்றில் சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூா்  மேட்டுப்பாளையம் ரயில் பாதையில்  ஆா்டா்லி, ஹில் குரோவ், உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை மேட்டுப்பாளையம் இடையே  இயங்கும் மலை ரயில் 2 ம் தேதி முதல் வரும் 6 ம் தேதிவரை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இருப்பினும்  உதகை,குன்னூா்  இடையே இயக்கப்படும்  மலை ரயில் வழக்கம்  போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com