தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண் மருத்துவா் கொலை வழக்கு: உதகையில் கண்டன பேரணி

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள்  சாா்பில் கண்டன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உதகை சேட் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பேரணியில் பங்கேற்றவா்கள், கொலை செய்யப்பட்ட பெண் வழக்கில் உரிய நீதி வழங்கக் கோரியும், சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினா்.