நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக நிா்வாகிகள்.

Updated On :13 மார்ச் 2026, 12:22 am

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் விற்பனை, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பாமா ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில் தவெகவினா் கையில் பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.