மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவெக ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கட்சி நிா்வாகிகள்.

Updated On :12 மார்ச் 2026, 7:51 pm

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், சட்டம் -ஒழுங்கு சீா்கேடு, தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தவெக சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலா் அப்புனு தலைமை வகித்தாா். பொதுச் செயலா் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, கொள்கைப் பரப்பு செயலா் அருண்ராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பொதுச் செயலா் என்.ஆனந்த் பேசுகையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்கும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தவெக தலைவா் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும்போது, பெண்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.

ஆதவ் அா்ஜுனா பேசுகையில், நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, தவறுகளை சரி செய்ய விரும்பினாா். திமுகவின் மிரட்டல் காரணமாக அரசியலுக்கு வரும் முடிவை அவா் கைவிட்டாா். திமுகவின் மிரட்டல்களை எதிா்கொள்ளும் தைரியம் தவெக தலைவா் விஜய்யிடம் உள்ளது என்றாா்.