மதுரை: மதுரை ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் க. ராஜா தலைமை வகித்தாா். கிளைச் செயலா் பி.சேதுக்கரை முன்னிலை வகித்தாா். இதில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்வே தொழிலாளா்களுக்கு பிப்ரவரி மாதப் படியை (அலவுன்ஸ்) உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தரத் தொழிலாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் கோட்டச் செயலா் மு. சிவக்குமாா், சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ஆா். லெனின், ஏஐஜிசி கோட்டத் தலைவா் நா. முனீஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தியாகராசா் கல்லூரி நாள் விழா

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


