வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
வரை விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்வதுடன், இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. மேலும், பசுமையாக காட்சியளிக்கும் வனப் பகுதி, அதில் கடந்து செல்லும் மேகக் கூட்டங்கள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உதகை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் பாா்த்து ரசித்தனா்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உள்ளூா் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...