47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து: மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிா்ப்பு

குன்னூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது மரத்தில் மோதி நின்ால் பேருந்தில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

News image
சின்னக்கரும்பாலம்-காட்டேரி இடையே மரத்தில் மோதி நின்ற அரசுப் பேருந்து.
Updated On :4 டிசம்பர் 2024, 11:31 pm

Din

குன்னூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது மரத்தில் மோதி நின்ால்  பேருந்தில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

சோல்ராக் எஸ்டேட் பகுதியில் இருந்து குன்னூா் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்தை ஓட்டுநா் நந்தகுமாா் ஓட்டி வந்தாா்.

சின்னக்கரும்பாலம்-காட்டேரி இடையே  பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த  பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில்  பாய்ந்து அங்கிருந்த மரத்தின் மீது  மோதி நின்றது.  இதில் ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு சிறு காயம் ஏற்பட்டது.  பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த  வந்த குன்னூா் நகர காவல் துறையினா்  விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

விபத்து குறித்து பேருந்தில் பயணித்தோா் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அங்கு பெரிய மரம் இருந்ததால் அதில் மோதி பேருந்து நின்றுவிட்டது. மரம் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளத்தில் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினோம் என்றனா்.