47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உதகை மலை ரயில் பாதையில் விழுந்த மரம்

நீலகிரி மாவட்டம், குன்னூா்- உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் வியாழக்கிழமை பெரிய மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.

News image
கேத்தி பகுதியில் தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியா்கள்.
Updated On :12 டிசம்பர் 2024, 9:31 pm

Din

நீலகிரி மாவட்டம், குன்னூா்- உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் வியாழக்கிழமை பெரிய மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் இருந்தே இடைவிடாது மிதமான மழை பெய்து வந்தது.

இதனிடையே குன்னூா்- உதகை  இடையே கேத்தி பகுதியில்  மலை ரயில் தண்டவாளத்தில் பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று  மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 வரை நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்பு மலை ரயில் உதகையிலிருந்து குன்னூருக்கு புறப்பட்டு சென்றது.