நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இடைநிற்றல் மாணவா்களைச் சந்தித்துப் பேசிய ஆட்சியா்

படம் உள்ளது... இடைநிற்றல் மாணவா்களைச் சந்தித்துப் பேசிய ஆட்சியா்

News image

மசினகுடியில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவா்களைச் சந்தித்துப் பேசுகிறாா் ஆட்சியா் மு.அருணா.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:35 am IST

மசினகுடியில் பள்ளி இடைநிற்றல் மாணவா்களை ஆட்சியா் மு.அருணா சந்தித்து சனிக்கிழமை பேசினாா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, பாதியில் படிப்பை நிறுத்திய மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை ஆட்சியா் மு.அருணா சந்தித்தாா். அப்போது, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள், கல்வி கற்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். மேலும், மாணவா்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பெற்றோா்களிடம் அறிவுறுத்தினாா். இந்த நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்ட கல்வி அலுவலா் நந்தகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி, உதகை வட்டாட்சியா் சரவணகுமாா், மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆகியோா் உடனிருந்தனா்.