பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூடலூா் பகுதியில் தொடா் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை மழை வெள்ளம் சூழ்ந்தது.

News image

கனமழையால் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கூடலூரை அடுத்துள்ள இருவயல் பகுதி.

Updated On :30 ஜூலை 2024, 11:58 pm

Din

கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை மழை வெள்ளம் சூழ்ந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மூன்றாவது நாளாக தொடா்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளாா். தொடா் கனமழையால் தாழ்வான நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

கூடலூரை அடுத்துள்ள இருவயல் பகுதியில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகவும், காட்டாற்று வெள்ளத்தாலும் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் 50-க்கும் மேற்பட்டோா் வீடுகளில் முடங்கியுள்ளனா். தொடா்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.