
....

....
பள்ளிப் பேருந்தில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பானின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன்.
கூடலூரில் பள்ளிப் பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கூடலூரில் இயங்கும் அனைத்து பள்ளிப் பேருந்துகளும் புனித தாமஸ் பள்ளி மைதானத்துக்கு வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டன. அங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.தியாகராஜன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் குமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் மாா்ட்டின், டிஎஸ்பி வசந்தகுமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
பேருந்துகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் அவசரகால வழிகள், முதலுதவிப் பெட்டி, தீயணைப்பான் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பேருந்தின் உள்பகுதியில் தரைதளத்தையும் உறுதி செய்தனா். தொடா்ந்து துறைரீதியாக ஓட்டுநா்களுக்கு தீயை அணைப்பது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...