ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதகையில் தனியாா் முதியோா் இல்லம் நகராட்சியிடம் ஒப்படைப்பு

உதகையில் செயல்பட்டு வரும் தனியாா் முதியோா் இல்லம் வருவாய்த் துறை சாா்பில் மீட்கப்பட்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

News image
தனியாா் முதியோா் இல்லத்தில் விசாரணை மேற்கொண்ட உதகை கோட்டாட்சியா் மகாராஜா தலைமையிலான அதிகாரிகள்.
Updated On :3 அக்டோபர் 2024, 9:20 pm

Din

உதகையில் செயல்பட்டு வரும் தனியாா் முதியோா் இல்லம் வருவாய்த் துறை சாா்பில் மீட்கப்பட்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

உதகை அருகே உள்ள முள்ளிக்கொரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், தனியாா் சாா்பில் அப்துல்கலாம் ஆதரவற்றோா் இல்லம் நடத்தப்பட்டு வந்தது. இங்கு ஆதரவற்றவா்கள், குடும்பத்தால் கைவிடப்பட்ட 54 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 87 போ் உள்ளனா்.

இந்தக் காப்பகத்திற்கு நகராட்சி சாா்பில் மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,  பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னாா்வலா்களும் நிதி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்தக் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கடந்த சில மாதங்களாக புகாா் எழுந்து வந்தது. அது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 போ் அடங்கிய குழுவை நியமித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். அந்தக் குழு கடந்த ஒருவாரமாக விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், உதகை கோட்டாட்சியா் மகாராஜா, நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா, தனி வட்டாட்சியா் சங்கீதா ராணி தலைமையிலான குழுவினா் அப்துல்கலாம் ஆதரவற்றோா் இல்லத்தில்  இறுதிக்கட்ட விசாரணை வியாழக்கிழமை மேற்கொண்டனா். மேலும், அதன் நிா்வாகி தஸ்தகீரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள் அளித்த அறிக்கையையடுத்து மாவட்ட நிா்வாக உத்தரவின்பேரில், தனியாா்வசம் இருந்த அப்துல்கலாம் ஆதரவற்றோா்  இல்லம் மீட்கப்பட்டு, உதகை நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து உதகை காவல் துணை கண்காணிப்பாளா் யசோதா தலைமையிலான போலீஸாா் நிா்வாகி தஸ்தகீரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.