ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முதுமலை புலிகள் காப்பக முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்த குட்டியானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

News image
தெப்பக்காடு யானைகள் முகாமில் உயிரிழந்த குட்டி யானை.
Updated On :17 அக்டோபர் 2024, 8:13 pm

Din

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்த குட்டியானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரிந்த பெண் குட்டி யானையை வனத் துறையினா் கடந்த மாா்ச் மாதம் மீட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்தனா். இங்கு கால்நடை மருத்துவரின் மேற்பாா்வையில் இந்தக் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்தக் குட்டி யானையின் உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை மாதமாக அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 9 மாதங்களே ஆன இந்தக் குட்டி யானை வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தது.

இதையடுத்து புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், குட்டியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்து முக்கிய பாகங்களை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து அனுப்பிவைத்தாா். பின்னா் அதே பகுதியில் சடலம் எரியூட்டப்பட்டது.

முன்னதாக புலிகள் காப்பக துணை கள இயக்குநா் திவ்யா, வனச் சரக அலுவலா் மேகலா உள்ளிட்ட வன அலுவலா்கள் உயிரிழந்த குட்டி யானையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.