முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வளா்ப்பு யானைகளுக்கு இனிப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வளா்ப்பு யானைகளுக்கு இனிப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

முதுமலை புலிகள் காப்பக முகாமில் யானைகளுடன் பொங்கல் விழா

முதுமலை புலிகள் காப்பக முகாமில் வெள்ளிக்கிழமை மாலை பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

கூடலூா்: முதுமலை புலிகள் காப்பக முகாமில் வெள்ளிக்கிழமை மாலை பொங்கல் விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விழாவில் வளா்ப்பு யானைகள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடா்ந்து யானைகளுக்கு பொங்கல், இனிப்பு உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்துகொண்டு, பொங்கல் வைத்து யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். வன அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். யானைகளின் அணிவகுப்பை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.

Dinamani
www.dinamani.com