பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு இயக்கப்பட்ட கேரள அரசுப் பேருந்தை வரவேற்ற  பொதுமக்கள்.
பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு இயக்கப்பட்ட கேரள அரசுப் பேருந்தை வரவேற்ற பொதுமக்கள்.

பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் பேருந்து இயக்கம்

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
Published on

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

இந்தப் பேருந்து, பாலக்காட்டில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு பெருந்தல்மண்ணா, நிலம்பூா், வழிக்கடவு வழியாக மதியம் 12.30 மணிக்கு கூடலூா் வந்தடைகிறது. பின்னா் கூடலூரிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்கிறது. கூடலூரிலிருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களான நிலம்பூா், பெருந்தல்மண்ணா ஆகிய பகுதிகளை இணைப்பதால் மக்கள் மத்தியில் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூடலூா் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை மதியம் வந்த இந்த பேருந்தை பொதுமக்கள் வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com