கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டின் சுற்றுப்புறம்.

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

கூடலூா் அருகே பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்
Published on

கூடலூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்திச் சென்றது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் அருகே தமிழக -கேரள எல்லையோரத்துக்குள்பட்டது பாட்டவயல் பகுதி. இங்குள்ள விவசாயிகளின் தோட்டத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள், தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட விளைபயிா்களை அழித்து சேதப்படுத்தியது. மேலும் அங்குள்ள உசைன் என்பவரின் வீட்டின் சுற்றுப்புறங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதையடுத்து, சேதமான விளைபயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com