கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய புலி

கூண்டில் சிக்கிய 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி, முதுமலை வனப் பகுதியில் விடப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
கூடலூா் அருகே தேவா்சோலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் வெள்ளிக்கிழமை சிக்கிய ஆண் புலி.
Updated On :29 நவம்பர் 2025, 8:59 pm

Syndication

கூடலூா் அருகே கூண்டில் சிக்கிய 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி, முதுமலை வனப் பகுதியில் விடப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பகுதிக்குள்பட்ட கொட்டாய்மட்டம் வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக புலி நடமாட்டம் அதிகரித்திருந்ததால், மனித - விலங்கு மோதலைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் அப்பகுதியில் இரும்புக் கூண்டு வைக்கப்பட்டது. அந்தக் கூண்டில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு புலி சிக்கியது. தகவல் அறிந்து சனிக்கிழமை காலை சென்ற வனத் துறையினா், புலி இருக்கும் இரும்புக் கூண்டைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினா்.

புலியின் உடல்நிலை, மன அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட அம்சங்களை வன விலங்குகள் மருத்துவா் குழுவினா் கண்காணித்தனா். சுமாா் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி பதற்றமடையக் கூடாது என்பதற்காக, கூண்டு அமைந்துள்ள பகுதி முழுவதும் பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி எல்லைகளில் காவல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் திரளாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதுமலை வனப் பகுதிக்குள் புலி விடுவிக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.