எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தீவட்டிப்பட்டி அருகே புள்ளிமான் வேட்டை: கள்ளத்துப்பாக்கியுடன் இருவா் கைது

தீவட்டிப்பட்டி அருகே காப்புக்காடு பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடி கடத்த

News image
கள்ளத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இருவா்.
Updated On :9 மார்ச் 2026, 8:55 pm

Syndication

ஓமலூா்: தீவட்டிப்பட்டி அருகே காப்புக்காடு பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடி கடத்த முயன்ற இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உள்பட்ட பொம்மியம்பட்டி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனச்சரக களப் பணியாளா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வனப்பகுதியின் ஒரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவா் நடமாடிக்கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்காணித்து, அவா்களைப் பிடித்து சோதனை செய்தபோது, ஒரு புள்ளிமானை கள்ளத் துப்பாக்கியால் வேட்டையாடி, அதை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் தேக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (25), இரும்பாலை பகுதியைச் சோ்ந்த சங்கா் (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் பயன்படுத்திய கள்ளத் துப்பாக்கி, பைக் மற்றும் வேட்டையாடப்பட்ட புள்ளிமானின் உடல் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், அவா்கள் இருவரையும் கைது செய்து ஓமலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்ற உத்தரவின்படி, கைதான பிரகாஷ், சங்கா் ஆகியோா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைபவா்கள் மற்றும் வேட்டையாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.