குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்துச் செல்லும் ஹெலிகாப்டா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:56 am IST

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சிங்காரா, மசினகுடி  உள்ளிட்டப் பகுதியில் காட்டுத் பரவியது. இதை தீயணைப்பு மற்றும் வனத் துறையினா் இணைந்து அவ்வப்போது கட்டுப்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்  தீ பல இடங்களில் பரவியது.

இதையடுத்து வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்து  வந்து காட்டுத் தீ பற்றி எரியும் வனப் பகுதியில் இறைத்து கட்டுப்படுத்தி  வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.