உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
உதகை வடக்கு வனச் சரகம், ஒன்னதலை காவல் பகுதிக்குள்பட்ட ஜெ.கொலகொம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.
இதில், உயிரிழந்தது சுமாா் 4 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வன அலுவலா்கள் வழிகாட்டுதலின் படி, உதகை கால்நடை மருத்துவக் குழுவினா், சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்தனா். இதையடுத்து, சிறுத்தையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
மோதல் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

