/
குமுளி அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் உறுதியானதைத் தொடா்ந்து, வனத் துறையினா் அந்தப் பகுதியில் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா. இவரது வீட்டின் அருகே இரவு நேரத்தில் கரடிகள் உலா வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் புதன்கிழமை பதிவாகியிருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்தப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், செல்லாா்கோவில் பிரிவு வனத் துறை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பகுதி முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கரடிகள் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



