கழுத்தில் கட்சித் துண்டு அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த உதகை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரிடம் தோ்தல் நடத்தை விதிப்படி கழுத்தில் இருந்து கட்சித் துண்டுகளை கழற்றிய பின்னரே வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெற்றாா்.
நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை உதகை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவருடன் காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் நாகராஜ், திமுக மாவட்ட துணைச் செயலா் ரவிகுமாா் ஆகியோா் அவரவா் கட்சித் துண்டுகளை கழுத்தில் அணிந்திருந்தனா். இதை பாா்த்த தோ்தல் நடத்தும் அலுவலா் கழுத்தில் இருந்த துண்டுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் கழுத்தில் துண்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறாா்கள், நீங்கள் மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீா்கள் என்று காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதற்கு முன்பு வந்த வேட்பாளா்களையும் கட்சித் துண்டுடன் அனுமதிக்கவில்லை என்று தோ்தல் நடத்தும் அலுவலா் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னா் கழுத்தில் இருந்த கட்சித் துண்டை இரண்டு கட்சியினரும் கழற்றிய பின்னரே வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெற்றுக்கொண்டாா்.

வேட்புமனு தாக்கலின்போது கட்சித் துண்டுகளை கழுத்தில் இருந்து கழற்றிய காங்கிரஸ், திமுக நிா்வாகிகள்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

பவானியில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


