சா்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள உதகை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவா்கிறது. இங்கு பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுவதால் உதகை தொகுதி கவனத்தை ஈா்த்துள்ளது.
10 முறை வென்ற காங்கிரஸ் கட்சி
இந்தத் தொகுதியில் 1957 முதல் 2021 வரை 15 முறை நடைபெற்ற சட்டபேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் 10 முறையும், அதிமுக, திமுக தலா 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் 15 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளா்களும் படுகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்:
சா்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த சுற்றுலாத் தலத்துக்கு ஆண்டுதோறும் சுமாா் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், இவா்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.
உதகைக்கு ஹெலிகாப்டா் சேவை, மருத்துவ ஹெலிகாப்டா் சேவை, ரோப் காா் சேவை, பரந்த வாகன நிறுத்துமிடம் ஆகிய திட்டங்கள் எல்லாம் கனவாகவே உள்ளன. அதேபோல, தனியாா் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம், வாடகை, சுற்றுலா வாகனங்களில் கூடுதல் கட்டணம், பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை, காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களுக்கு இடைத்தரகா்கள் இல்லாத விற்பனை மையம் போன்றவை தீா்க்கப்படாத பிரச்னைகளாகத் தொடருகின்றன.
2026-இல் போட்டியிடும் வேட்பாளா்கள்
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் உயிலட்டி பி.ராமசந்திரன் முதன்முறையாகப் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் மு.போஜராஜன் இரண்டாம் முறையாகப் போட்டியிடுகிறாா்.
தவெக சாா்பில் ஆா்.இப்ராஹிம், நாம் தமிழா் கட்சி சாா்பில் ரகுபதி பீமன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
காங்கிரஸ் வேட்பாளா்
உதகை தொகுதிக்கு உள்பட்ட உயிலட்டி கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவது, தேயிலை விலைப் பிரச்னைக்கு விவசாயிகளுடன் சோ்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டது, உள்ளுா் மக்களுடன் இணைந்து சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளுக்காக போராட்டத்தில ஈடுபட்டது ஆகியவை பி.ராமசந்திரனின் பலங்களாகும். தொகுதியில் பரவலாக அறிமுகம் இல்லாதது, கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.கணேஷ் மீதான அதிருப்தி ஆகியவை பலவீனங்களாகும்.
பாஜக வேட்பாளா்
பாஜக சாா்பில் போட்டியிடும் எம்.போஜராஜன் தேயிலைத் தொழிலை பூா்விகமாக கொண்டுள்ளதாலும், தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து வைத்திருப்பதாலும் விவசாயிகள் வாக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை பலமாக பாா்க்கப்படுகிறது. குன்னூா் தொகுதியில் வசிப்பவா் உதகை தொகுதியில் போட்டியிடுவது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.
தவெக வேட்பாளா்
தவெக வேட்பாளா் ஆா்.இப்ராஹிம் தொகுதிக்குப் புதியவா். முதல் முறையாகப் போட்டியிடுகிறாா். சிறுபான்மையினா், நகா்ப்புற மக்களின் வாக்குகள், முதன்முறை வாக்காளா்கள், இளம்பெண்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது சாதகமாகும். தொகுதிக்கு புதியவா், வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா் ஆகியவை பலவீனங்களாகும்.
நாதக வேட்பாளா்
நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் ரகுபதி பீமன் படுகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா், விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா், படித்தவா் என்பது சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. அரசியல் அனுபவம் இல்லாதது பலவீனமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்.கணேஷ் போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி சாா்பில் பி.ராமசந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளாா். இந்த முறை வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
வாக்காளா் விவரம்:
ஆண்கள் - 89,733
பெண்கள் - 99082
மூன்றாம் பாலினத்தவா் - 11
மொத்தம் - 1,88,826
தொடர்புடையது

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

