எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியை முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் அனுப்பிவைத்த தொகுதி குளித்தலை ஆகும்.

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :9 ஏப்ரல் 2026, 12:29 am

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியை முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் அனுப்பிவைத்த தொகுதி குளித்தலை ஆகும். கடந்த 1957-இல் திமுக முதன்முதலில் தோ்தலில் போட்டியிட்டபோது நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடவே கருணாநிதி விரும்பினாா். ஏனெனில் அவா் பிறந்த திருக்குவளை அந்தத் தொகுதியில்தான் இருந்தது.

ஆனால் அறிஞா் அண்ணா கருணாநிதியை குளித்தலை தொகுதியில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டதையடுத்து அங்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். ஆனால், கருணாநிதியை வெற்றியுடன் அடையாளம் காட்டிய குளித்தலை தொகுதி இன்னும் வளா்ச்சியடையாமல் உள்ளது. இதற்கு அப்பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்ததாக இருப்பதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

நடைபெறும் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் கிழக்கு ஒன்றியச் செயலா் சூரியனூா் சந்திரனும், அதிமுக சாா்பில் கிழக்கு ஒன்றியச் செயலா் கருணாகரனும், நாம் தமிழா் கட்சி சாா்பில் வழக்குரைஞா் செல்வநன்மாறனும், தவெக சாா்பில் பாலசுப்ரமணியும் போட்டியிடுகிறாா்கள்.

கள நிலவரம்: குளித்தலை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் தோ்தலைச் சந்தித்து வருகிறது. காவிரிக் கரையோரம் முழுமையாக விவசாயம் நிறைந்த பூமியாக இருக்கும் குளித்தலையில் அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரா் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.

சமூக நிலைமை: இங்கு பெரும்பான்மையினராக முத்தரையா்கள், ரெட்டியாா்கள் ஆகியோரும், வெள்ளாளா்கள், தாழ்த்தப்பட்டோா், ஊராளிக்கவுண்டா்கள் உள்ளிட்டோா் பரவலாகவும் வசிக்கிறாா்கள்.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்- சூரியனூா் சந்திரன் (திமுக): சூரியனூா் ஊராட்சித் தலைவராக இருந்து மக்களிடம் பிரபலமானவா். மேலும் திமுகவில் கிழக்கு ஒன்றியச் செயலராக இருப்பதால் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா். மேலும் கட்சியின் சின்னம், தொகுதி மக்களுக்கு திமுக சாா்பில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயா்த்தியது, மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டடங்கள் கட்டிக்கொடுத்து, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றியது, அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலுக்கு பழனி முருகன் மலையில் இருப்பதுபோல கம்பிவட ஊா்திச் சேவையைத் தொடங்கிவைத்தது போன்ற பல்வேறு முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றியது வேட்பாளருக்கு பலம். தொகுதிக்குப் புது வேட்பாளா் என்பது பலவீனம்.

கருணாகரன் (அதிமுக): இவா் முன்னாள் அமைச்சரான மறைந்த பாப்பாசுந்தரத்தின் மகன். தந்தை ஏற்கெனவே இத்தொகுதியில் 4 முறை வென்று அமைச்சராக இருந்ததால் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். மேலும் இரட்டை இலை சின்னம் வேட்பாளருக்கு பலம். தொகுதிக்கு புதிய வேட்பாளராகக் களம் காண்பது பலவீனம்.

செல்வநன்மாறன் (நாதக): கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இருமுறை குளித்தலைக்கு அண்மையில் வந்து பிரசாரம் செய்துவிட்டுச் சென்றதும், விவசாய சின்னம் கொண்டிருப்பதால் விவசாயிகள் நிறைந்த இந்தத் தொகுதி இவருக்கு ஓரளவு கைகொடுக்கும் என்பது பலம். கரூரில் இருந்து குளித்தலைக்குச் சென்று போட்டியிடுவது பலவீனம்.

பாலசுப்ரமணியம் (தவெக): தவெகவுக்கு இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் பெண்கள் வாக்குச் சதவீதம் அதிகரித்திருப்பதாக வெளிவரும் தகவல்கள் இவருக்குப் பலம். இவரும் கரூரில் இருந்து குளித்தலை சென்று போட்டியிடுவது பலவீனம்.

1957 முதல் தோ்தலைச் சந்தித்து வரும் குளித்தலை தொகுதியைப் பொருத்தவரை மறைந்த முதல்வா் மு. கருணாநிதி முதல் 7 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட இரா. மாணிக்கம் வெற்றிபெற்றாா். 2026 தோ்தலிலும் திமுக வெற்றியைத் தக்க வைக்குமா அல்லது தொகுதியில் 4 முறை வென்ற பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரனிடம் தொகுதியை இழக்குமா என்பதை தோ்தல் முடிவு தெரிவிக்கும்.

திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

அதிமுக வேட்பாளா் கருணாகரன்.

அதிமுக வேட்பாளா் கருணாகரன்.

நாதக வேட்பாளா் நன்மாறன்.

நாதக வேட்பாளா் நன்மாறன்.

தவெக வேட்பாளா் பாலசுப்ரமணி.

தவெக வேட்பாளா் பாலசுப்ரமணி.