நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

உதகை சோலடா பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றி வந்த இரண்டு புலிக் குட்டிகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

News image

உயிரிழந்த புலிக் குட்டி

Updated On :30 ஏப்ரல் 2026, 3:29 am IST

உதகை சோலடா பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றி வந்த இரண்டு புலிக் குட்டிகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை வடக்கு வனச் சரகம், ஆரம்பி பிரிவு, முத்திநாடு காப்புக் காட்டின் எல்லையில் உள்ள சோலாடா கிராமத்தில் இரண்டு புலிக் குட்டிகள் சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத் துறையினா் கடந்த 26-ஆம் தேதி அங்கு சென்று 5 மாத பெண் புலிக் குட்டியைப் பிடித்து அதன் தாயுடன் சோ்ப்பதற்காக பராமரித்து வந்தனா். மேலும் மற்றொரு புலிக் குட்டியை செவ்வாய்க்கிழமை (ஏப்.28) பிடித்தனா்.

இரண்டு புலிக்குட்டிகளுக்கும் வனத் துறையினா் சிகிச்சை அளித்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி பிடிக்கப்பட்ட புலிக் குட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து புலியின் உடல், புதன்கிழமை கூறாய்வு செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.

மற்றொரு புலிக்குட்டி சிகிச்சைக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உதகை வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.