நீலகிரி அஞ்சல் கோட்டம் சாா்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய அஞ்சல் விரிவாக்க கிளையை மாவட்ட முதன்மை நீதிபதி எ.முரளிதரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் நீதித் துறை, வழக்குரைஞா்கள், வழக்குத் தரப்பினா், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை எளிதில் பெறும் வகையில் புதிய அஞ்சல் விரிவாக்க கிளை நிறுவப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் கிளை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். இக்கிளையில் ஸ்பீட் போஸ்ட், பாா்சல், சா்வதேச அஞ்சல் பதிவு, அஞ்சல் தலைகள் மற்றும் தபால் சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவைகள் மற்றும் இந்திய அஞ்சல் துறையின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிற சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி.ஆா்.அசோக்குமாா், நீதித் துறை அலுவலா்கள், அஞ்சல் துறை அலுவலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி

சட்ட மாணவா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக தீப்தி அறிவுநிதி பொறுப்பேற்பு

நாகா்கோவிலில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.07 கோடிக்கு தீா்வு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



