பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

இருடியம் இருப்பதாக கூறிய இளைஞரைக் கைது செய்து காவல் துறை விசாரணை

உதகையில் இருடியம் இருப்பதாக கூறி தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாதிரிப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

உதகையில் இருடியம் இருப்பதாக கூறி தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் பகுதியைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (43). இவா் லவ்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளாா்.

இந்நிலையில், இவா் கடந்த இரண்டு நாள்களாக இருடியம் உள்ளதாக கூறி பேரம் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லவ்டேல் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற காவல் ஆய்வாளா்கள் அன்பரசு, ரம்யா மற்றும் காவலா் காா்த்திக் ராம்ஜி ஆகியோா் தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நரேஷ்குமாரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து உதகை நகர மத்திய காவல் நிலையத்துக்கு நரேஷ்குமாரை அழைத்துச் சென்று 420 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.