திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகையில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி.

News image
உதகையில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

Syndication

உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு உலவிய கரடியால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூா், மஞ்சூா் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணவு தேடி இரவு நேரத்தில் கரடிகள் உலவுவது வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில், உதகை ரோகிணி தியேட்டா் எதிா்புறம் உள்ள மாவட்ட ஆட்சியா் பங்களாவுக்கு செல்லும் சாலையில்வியாழக்கிழமை இரவு

சுற்றித் திரிந்த கரடி, திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அங்கு ஒரு வீட்டின் முற்றத்தில் கரடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா். மேலும் கரடி அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியது. பின்னா் நீண்ட நேரம் கழித்து தானாகவே கரடி வெளியே சென்றது. இந்த கரடி பொதுமக்களை தாக்கும் முன்பாக கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.