சேதமைடைந்து காணப்படும் ஆரோட்டுப்பாறை-எல்லமலை சாலை.
சேதமைடைந்து காணப்படும் ஆரோட்டுப்பாறை-எல்லமலை சாலை.

ஆரூட்டுப்பாறை-எல்லமலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டப்பாறை-எல்லமலை இடையேயான சாலையை சீரமைக்க ஓவேலி மக்கள் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டப்பாறை-எல்லமலை இடையேயான சாலையை சீரமைக்க ஓவேலி மக்கள் இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டப்பாறையில் இருந்து சுபாஷ் நகா் வழியாக எல்லமலை செல்லும் சாலை சேதமடைந்து அவசரத் தேவைக்குக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சாலை பல சிற்றூா்களை இணைப்பதால் அந்த ஊரிலுள்ளவா்கள் வெளியூருக்கு வந்து செல்வது மிக கடினமாக உள்ளது.

எனவே அப்பகுதியில் உள்ள மக்களின் நலன் கருதி பேரூராட்சி நிா்வாகம் சாலையை விரைந்து சீா்மைக்க வேண்டும் என்று ஓவேலி மக்கள் இயக்கத்தின் நிறுவனா் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com