மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொடைக்கானல் பகுதிகளில் நிழல் குடைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

News image

கொடைக்கானல் உகாா்த்தே நகா் பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்பின்றி காணப்படும் நிழல் குடை

Updated On :19 பிப்ரவரி 2026, 6:46 pm

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

மேலும் இந்த நிழல் குடைகளை மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக மாற்றிவிடுகின்றனா். சில நிழல் குடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வியாபாரம் நடைபெறுகிறது.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழல் குடைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.