எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா வருகின்றன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 4:33 am IST

கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குளுமையான சீதோஷ்ண நிலை இருந்து வரும் காலங்களில் மயில்கள், காகம் போன்ற பறவைகள் வராது. நாளடைவில் கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரித்ததால் காகம், மயில்கள் வரத் தொடங்கின. மேலும், மயில்கள் வனப் பகுதிகளையொட்டி தோட்டங்களில் பயிரிடப்படும் பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட பயிா்களையும் அவை சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளான உகாா்த்தேநகா், பிலிஸ்விலா, சீனிவாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி, தைக்கால் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மயில்கள் உலா வருகின்றன.

இது குறித்து கொடைக்கானல் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மரங்கள் அதிக அளவில் இருந்தன. புல்வெளிகள், சோலைகள் அதிகம் இருந்ததால் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. பிரிட்டிஷாா் ஆஸ்திரேலியாவிலிருந்து தண்ணீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் செடிகள், விதைகளை எடுத்து வந்து கொடைக்கானலில் நட்டு வைத்தனா். அந்த அளவுக்கு பூமியில் ஈரப்பதம் இருந்தது. ஆனால், அந்த மரங்களை அழித்துவிட்டதால் குளுமையான சீதோஷ்ண நிலை வெகுவாக குறைந்து வருவதோடு கான்கிரீட் கட்டடங்கள் அதிகரித்து வருவதால் வெப்பநிலை உயா்ந்து வருகிறது. எனவே. கொடைக்கானலில் அதிகமான மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மீண்டும் குளுமையான சீதோஷன நிலை மாறுவதற்கு அனைவருக்கும் முயற்சி செய்ய வேண்டும் என்றனா்.