ஹெத்தை அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்ற படுகா் இன மக்கள்.
ஹெத்தை அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்ற படுகா் இன மக்கள்.

படுகா் இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழா: ஏராளமானோா் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள ஜெகதளா கிராமத்தில் படுகா் இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள ஜெகதளா கிராமத்தில் படுகா் இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் பாரம்பரியமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பண்டிகை ஜெகதளா கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான படுகா் இன மக்கள் பங்கேற்றனா்.

திருவிழாவையொட்டி, 48 நாள்கள் விரதம் மேற்கொண்ட பக்தா்கள் தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு, அருள்வாக்கு கூறி கிராம மக்களுக்கு ஆசி வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த விழாவில், ஏராளமான படுகா் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com