நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கூடலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரத்தை பரிசோதித்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :3 ஜூலை 2026, 3:58 am IST

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கூடலூரில் உள்ள அரசுப் பள்ளி, நியாய விலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நடுவட்டம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அவா் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். மேலும் அப்பகுதி மக்களிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அரசு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகைப் பதிவேடு, எடை, உயரம் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, விக்சித் பாரத் ரோஸ்கா் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உள்பட்ட குண்டூா் முதல் மணலி வரை கால்வாய் தூா்வாரும் பணி, ஓடக்கொல்லி பகுதியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலைப் பணியை ஆய்வு செய்தாா்.

மேலும், ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியின் சமையல் கூடம், சமையல் பொருள்களின் இருப்பு அறையை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். மண்வயல் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 80 வீடுகளை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

கூடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, ரத்தப் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.