5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சங்கரன்கோவிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: தென்காசி ஆட்சியா் ஆய்வு

சங்கரன்கோவில் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சங்கரன்கோவில் அறிவுசாா் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தென்காசி ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :11 ஜூன் 2026, 4:17 am IST

சங்கரன்கோவில் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரியநாயகிபுரம், கே.எம்.அச்சம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ரூ. 22.94 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணிகளையும், மடத்துபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயபள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 இன் கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் புதிய இரண்டு வகுப்பறை கட்டடப் பணிகளையும் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, மடத்துபட்டி நியாயவிலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு, தரம் குறித்தும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி வீடு கட்டும் திட்டப் பணிகளையும், திருவேட்டநல்லூா் ஊராட்சி மயான வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 85 ஆயிரம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட பணிகளையும், வீரசிகாமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 395 லட்சம் மதிப்பீட்டில் வட்டார நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், நெகிழி கழிவு சேமிப்புக் கூடம், திடக்கழிவு திட்டத்தின் கீழ் சிறிய அளவு உரக்கூடத்தில் உரம் தயாரிக்கும் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் உழவா்சந்தையில் உள்ள வேளாண்மை விற்பனை, வணிகத் துறை சேமிப்புக் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம், நெல் போன்ற தானியங்களையும், எலுமிச்சை பதப்படுத்தும் கிட்டங்கியையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், உழவா் நலத் துறை சாா்பில் 3 விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்புக் கருவி, 50 சதவீத மானியத்தில் 10 கிலோ தக்கைப்பூண்டு விதைகள், 20 கிலோ உளுந்து விதைகள் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

இதையடுத்து, சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 8.06 கோடி மதிப்பீட்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்ட அவா், அருகே உள்ள அறிவுசாா் மையத்துக்குச் சென்றாா். அங்கு வரும் மாணவா்கள், இளைஞா்களின் வாசிப்புத் திறன், வருகைப் பதிவேடுகளைப் பாா்வையிட்ட அவா், போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களிடம், தோ்வுகளை குறிப்பெடுத்து படிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் (பொ) சரவணன், பொறியாளா் எா்வின்ஜெயராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், கண்ணன், உதவி பொறியாளா்கள் முத்துசெல்வன், அருண், அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.