தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கோத்தகிரி அருகே ஈக்கள் தொல்லையால் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கருப்பு ஈக்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி

News image

பாட்டில் மீது அமா்ந்துள்ள ஈக்கள்.

Updated On :14 ஜூலை 2026, 12:23 am IST

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கருப்பு ஈக்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோத்தகிரியில் கடந்த சில நாள்களாக அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சிறிய அளவில் காணப்படும் நூற்றுக்கணக்கான கருப்பு ஈக்கள், கிராம மக்கள் உண்ணும் உணவு, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றின் மீது மொய்த்து வருவதால் கடந்த சில வாரங்களாக குஞ்சப்பனை, கொட்டக்கம்பை, அரவேனு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மருந்துகள் அடித்தாலும் ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி நிா்வாகம் குப்பைத் தொட்டிகள் மற்றும் கால்வாய் உள்ள இடங்களில் மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.